Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாராய ஊறலை எடுத்த 2 பேர் விஷ வாயு தாக்கி சாவு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை எடுக்கச் சென்ற சாராய வியாராரிகள்இருவர் விஷ வாயு தாக்கி இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள பள்ளி மாம்பாறை கிழக்கம்கரை புத்தன் வீட்டைச் சேர்ந்தவர்வீசும்பரன் (வயது 43). இவரது நண்பர் ஜெயானந்தன் (வயது 40). இவர் பக்கத்து ஊரான பிலாம்பழித்தியைச்சேர்ந்தவர்.

நண்பர்கள் இருவரும் கூட்டாக சராய வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் வீட்டின் அருகேயுள்ள 35அடி ஆழ கிணற்றில் சராயத்தை ஊற வைத்திருந்தனர்.

சம்பவ தினத்தன்று சாராய ஊறலை எடுக்க நண்பர்கள் இருவரும் சென்றனர். ஊறலை எடுப்பதற்காக ஜெயானந்தன்கிணற்றில் இறங்கினார். அவர் நெடு நேரமாகியும் மேலேறி வரவில்லை.

இதையடுத்து அவர் என்ன ஆனார் என்று பார்ப்பதற்காக வீசும்பரனும் கிணற்றுக்குள் இறங்கினார். அவரும் மேலேவரவில்லை.

இந்நிலையில் அக்கம்பக்கதில் இருந்த சிலர் கிணற்றுக்குள் ஜெயானனந்தனும், வீசும்பரனும் பிணமாக கிடப்பதைபார்த்தனர். உடனே அவர்கள் நொய்யாறங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி இறந்து போன இருவர் உடலையும் மேலேகொண்டுவந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை செய்தனர். கிணற்றில் ஊறப் போட்டிருந்த 2 சாராயபானைகள் உடைந்ததால் வெளிவந்த விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என்று விசாரணையில்தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+