173 வாக்குச் சாவடிகளில் 19ம் தேதி மறு தேர்தல்
சென்னை:
சென்னையில் 43 வாக்குச் சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் 173 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுதேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நான்கு மாநகராட்சிகள் உள்ளிட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் கட்டவாக்குப் பதிவு நடந்தது. இதில் பெருமளவில் வன்முறை, துப்பாக்கிச் சூடு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்ஆகியவை நடந்தன.
இதையடுத்து சென்னையில் வன்முறை நடந்த 43 வாக்குச் சாவடிகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த130 வாக்குச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்த மாநல தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையர் பி.எஸ்.பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில்,
19ம் தேதி இங்கு மறு தேர்தல் நடைபெறும். அப்போது வாக்காளர்களின் நடுவிரலில் மையிடப்படும்.
353 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சம்பந்தப்பட் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மறு தேர்தலுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடக்கும் இரண்டாவது கட்டத் தேர்தல் மற்றும் 19ம் தேதி நடக்கும் மறு தேர்தலின்போதுவன்முறையில் ஈடுபடும் கும்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்குமாறுகாவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக திருவண்ணாமலை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.சென்னையில் 36.1 சதவீத ஓட்டுக்களே பதிவானது என்றார் பாண்டியன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications