கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிக்கும் மர்ம பார்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிக்கும் மர்ம பார்சல் வந்துள்ளது. அந்தப் பார்சலில்இருந்த பொடி ஆந்த்ராக்ஸ் கிருமியா என்று ரசாயன பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2 வாரகாலமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் என்னும் கொடிய விஷக்கிருமிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன்அதிகாரிகளுக்கு அனுப்பிவருகின்றனர்.

இந்தப் பார்சலில் பஞ்சு போன்ற ஒரு பொருளுக்குள் அந்த கிருமி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின்நிலைய அதிகாரி ஒருவருக்கு பார்சலும் கடிதமும்வந்துள்ளது.

பார்சலுக்குள் பொடி போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. கடிதத்தில் ஆப்கான் மீது அமெரிக்கா அநியாயமாகப்போர் தொடுத்துள்ளதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான விளையுகளை இந்தியா சந்தித்தே தீரும்என்று எழுதப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை விமானப்படை அதிகாரிக்கும் ஒரு பார்சலும் கடிதமும் வந்துள்ளது.

இந்த 2 அதிகாரிகளும் தங்களுக்கு வந்த பார்சலையும் கடிதத்தையும், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.போலீசார் அதை கோர்ட் மூலம் ராசாயனப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பார்சலைப் பிரித்த அந்த 2அதிகாரிகளும் தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+