கருணாநிதி குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள்: பொன்னையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் கருணாநிதி கூறும் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிகமுவினர் கள்ள ஓட்டு போடுவதிலும், வன்முறையிலும் ஈடுபட்டதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னையன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா மீது மக்கள் அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ளனர். இதை பொறுக்க முடியாத கருணாநிதி,தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று உணர்ந்த கருணாநிதி. தோல்வி பயத்தில் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

அதிமுகவினர் யாரும் கள்ள ஒட்டு போடும் நடவடிக்கையில் இறங்க மாட்டார்கள். கள்ள ஓட்டு போடுபவர்களைதடுக்கும் முயற்சியில் அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். திமுகவினர் வாக்கு சாவடிகளில் குழப்பம் ஏற்படுத்தமுனைந்த போது அதை அதிமுக தொண்டர்கள் தடுத்தனர்.

இதை பொறுக்க முடியாமல் அராஜகம், அக்கிரமம் என்று கூக்குரலிட்டு வருகிறார் க-ரு--ணா-நி-தி. அரசியல் எதிரிகளைசந்திக்க முடியாத கருணாநிதி வன்முறையில் ஈடுபடுவார் என்பது அவரது கடந்த கால வரலாற்றை அறிந்தவர்கள்உணர்வார்கள்.

சில இடங்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களை பெரிதுபடுத்தி அராஜகம் நடக்கிறது வன்முறை நடக்கிறது.அக்கிரமம் நடக்கிறது என்று புலம்புகிறார் கருணாநிதி

கடந்த முறை ஆட்சி அதிகாரம் அவரிடம் இருந்ததால் மாநகராட்சி தேர்தலிலும், திருச்சி சட்டமன்ற இடைதேர்தலையும் இவர் நடத்திய விதம் எல்லோருக்கும் தெரியும்.

தேர்தல் தோல்வி ஜுரத்தில் அவர் கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஏற்க மாட்டார்கள் என்று அந்தஅறிக்கையில் பொன்னையன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+