306 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் தொடங்கியது
சென்னை:
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட 306 வாக்குச் சாவடிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மறு தேர்தல் தொடங்கியது.
உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள், கள்ள ஓட்டுச்சம்பவங்கள், வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்களை அள்ளிக் கொண்டு ஓடிய சம்பவங்கள் ஆகியவைகாரணமாக தமிழகம் முழுவதும் 276 வாக்குச் சாவடிகளில் இன்று மறு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கமிஷன் கூறியிருந்தது.
அதன்படி, இன்று காலை 7.30 மணிக்கு மறு வாக்குப் பதிவு தொடங்கியது.
முதல்கட்ட தேர்தலில் நிறைய வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால், தற்போது இந்த வாக்குச் சாவடிகள் முழுவதிலும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் இன்று மறு வாக்குப் பதிவு நடக்கவுள்ள வாக்குச் சாவடிகள் விவரம்:
சென்னை: 43, விருதுநகர்: 7, விழுப்புரம்: 9, வேலூர்: 22, திருவாரூர்: 1, திருவண்ணாமலை: 29, திருவள்ளூர்: 78, தூத்துக்குடி: 2,திருச்சி: 1, நெல்லை: 7, தேனி: 10, சிவகங்கை: 2, சேலம்: 1,ராமநாதபுரம்: 8, பெரம்பலூர்: 6, நீலகிரி: 4, நாமக்கல்: 4, மதுரை: 8, காஞ்சிபுரம்: 28, தர்மபுரி: 31, திண்டுக்கல்: 2, கடலூர்: 11, அரியலூர்: 1, மொத்தம்: 306


Click it and Unblock the Notifications
