புதுவை முதல்வர் சண்முகம் ராஜினாமா
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் தன் பதவியை இன்று (வெள்ளிக்கிழமை) காலை ராஜினாமா செய்தார்.
அடுத்த மாதம் 23ம் தேதிக்குள் எம்.எல்.ஏ. ஆகவேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும்அவருக்கு தங்கள் சீட்டைக் கொடுக்கத் தயாராக இல்லை.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் வந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பேசிப்பார்த்தும் பயன் இல்லை.
இதனால் சண்முகம் ராஜினாமா செய்யவேண்டிய கட்டயாத்திற்குத் தள்ளப்பட்டார். இதற்கிடையே புதியமுதல்வரைத் தேர்ந்தெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய முதல்வர் யார் என்று இன்னும் தெரியாத நிலையில் பாண்டிச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்சண்முகம்.
பாண்டிச்சேரி ஆளுநரான லெப்டினன்ட் கவர்னர் ரஜினி ராயை இன்று காலை சந்தித்த சண்முகம், தன்னுடையராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். ஆளுநரும் அதை ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே பாண்டிச்சேரிக்கு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக, பாண்டிச்சேரி காங்கிரஸ்எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஆனந்தா-இன் ஓட்டலில் நடந்து வருகிறது.
பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசுவாமி அல்லது முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
அரசும், கட்சியும் சுமூகமான முறையில் செயல்பட உதவும் வகையிலேயே நான் ராஜினாமா செய்தேன். எந்தஎம்.எல்.ஏவும் எனக்காக ராஜினாமா செய்ய முன்வராத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
கட்சி மேலிடத்தில் எனது முடிவைத் தெரிவித்து விட்டேன். எனது ஒரு வருட ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரிமாநில மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். 1000 மெகாவாட் திறன் கொண்ட மின்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
மன நிறைவோடுதான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இதில் எனக்கு வருத்தமில்லை என்றார்சண்முகம்.
இன்னும் ஓரிரு நாளில் அடுத்த பாண்டிச்சேரி முதல்வர் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications