டான்சி வழக்கு: பத்திரத்தில் இருப்பது ஜெ. கையெழுத்துதானா? - நீதிபதி
சென்னை:
டான்சி நிலம் விற்கப்பட்ட பத்திரத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து உள்ளதா என்று அரசு தரப்பு வக்கீலுக்குநீதிபதி கேள்வி தொடுத்தார். அரசு வக்கீலின் வாதத்திற்கு, நீதிபதி பதில் கேள்விகள் கேட்டார். அதற்கும் அரசுவக்கீல் பதிலளித்தார்.
டான்சி நில ஊழல் வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாஅப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த அப்பீல் மனு மீதான விசாரணை நீதிபதி தினகர்முன் நடந்து வருகிறது.
நேற்று (வியாழக்கிழமை)12வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
டான்சி நில விற்பனை பத்திரத்தில் ஜெயலலிதா கையெழுத்து போட்டுள்ளதற்கான ஆதாரம் உள்ளதா என்று அரசுசிறப்பு வக்கீல் வெங்கபதியிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி தினகர்.
இதற்கு பதிலளித்து வெங்கடபதி கூறுகையில்,
ஜெயலலிதா விற்பனை பத்திரத்தில் தான் கையெழுத்து போடவில்லை என்று மறுத்துள்ளார். ஆனால் அதே சமயம்அந்த பத்திரத்தில் ஜெயலலிதாவின் ஆடிட்டர் ராஜசேகரன் மற்றும் டான்சி பொது மேலாளர் பாலசுப்ரமணியம்ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இரு சாட்சிகளை விசாரித்த போது பத்திரத்தில் உள்ளது ஜெயலலிதா கையெழுத்துதான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தான் கையெழுத்து போடவில்லை என்று ஜெயலலிதா மறுப்பு தெரிவிதாலும்பத்திரத்தில் உள்ள விஷயங்களை ஜெயலலிதா மறுக்கவில்லை.
மேலும் இரு சாட்சிகளும் தாங்கள் கையெழுத்து போட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து டான்சி நிலம் வாங்கியதில் சதித்திட்டம் நடந்தது. இந்த சதித்திட்டம் 1991ம் ஆண்டு தீட்டப்பட்டது.டான்சி நிலத்தை மனைகளாக பிரித்து விற்றிருந்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது என்று வெங்கடபதிவாதிட்டார்.
சதித்திட்டம் நடந்ததாக கூறப்படும் கூட்டத்தில் தலைைமச் செயலாளர்,. தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். ஆனால் 3 செயலாளர்கள் மட்டுமே அரசு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும்விசாரிக்கப்படவில்லை. டி.ஆர் சீனிவாசன் மட்டும் எப்படி குற்றம் செய்யததாக கூறமுடியும்.
அரசு நிலத்தை ஒருவருக்கே ழுழுவதுமாக விற்றால் அரசுக்கு இழப்பு ஏற்படாது. மேலும் டான்சி நில விற்பனைகுறித்து துணைக்குழு அமைக்கப்பட்டு, டான்சி நில இயக்குனர்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்புதான் அரசுமுடிவுக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்காமல் ஒரு சிலர் மட்டும்சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக என்றும் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு காரசாரமான விவாதம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications