ராமநாதபுரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு
ராமநாதபுரம்:
தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) உள்ளாட்சி தேர்தலின் இரண்டாவது கட்டவாக்குபதிவின்போது வன்முறையாளர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடுநடத்தினர்.
ராமநாதபுரம், காயல்குடி டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 2 சுயேட்சைவேட்பாளர்களுக்கு இடையே கள்ள ஓட்டு போட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.இதனால் கலவரம் ஏற்பட்டது
கலவர்த்தை அடக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனாலும் கலவரம்அடங்கவில்லை, இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். கலவரகும்பலை முழுவதும் அடக்க வானத்தை நோக்கி சுட்டனர். இதன் பின் கலவரம் அடங்கிநிலைமை கட்டுக்குள் வந்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
ராமநாதபுரம், முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் அதிமுக எம்.எல்.ஏவானபதினெட்டான்படியானின் சகோதரர் மகன் ஆறுமுகம். இவர் தன் ஆதரவாளர்களுடன்சென்று கொண்டிருந்போது தாக்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை, காவனூர் மற்றும் செல்வனேந்தல் கிராமத்தை சேர்நத் மக்கள் மறுதேர்தல் நடத்தக் கோரி ஜெகதாப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலின் போது வாக்குப்பதிவுக்காக தேர்தல் பணியாளர்கள் கொண்டுவந்திருந்தபொருட்களை இவர்கள் கைப்பற்ற முனைந்ததால் போலீசார் வானத்தை நோக்கிதுப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, தென்கரை கிராம மக்கள் தங்கள் ஊரிலிருந்த வாக்கு சாவடியை 3கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேறு ஒரு கிராமத்திற்கு மாற்றியதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர் இங்கும் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுவீசினர்.
திருப்பத்தூர் - தர்மபுரி சாலையில் சேலத்தூர் கிராம மக்கள் மறு வாக்குபதிவுநடத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்லுமாறுபோலீசார் கேட்டுக் கொண்டனர்.
அதை கேட்க மறுத்து மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களைகலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்கலைந்து சென்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி, பழைய பேட்டிையில் கள்ள ஓட்டு போடப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தர்மபுரி கடலூர் ஆகிய 2 இடங்களில் வாக்கு பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டது.கடலூர், திட்டக்குடியில் அருந்ததியர்களும், புளியங்குடியில் ஆதிதிராவிடர்களும்வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 34 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications