பதவி இழந்தார் சண்முகம்... தாடி எடுத்தார் எம்.எல்.ஏ.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் முதல்வர் பதவியை இழக்கும் வரை தாடியை எடுக்கமாட்டேன் என்று சபதம்போட்டு கடந்த 5 மாத காலமாக தாடி வளர்த்து வந்த பாண்டிச்சேரி சுயேட்சை எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணராவ்ஞாயிற்றுக்கிழமை தனது தாடியை எடுத்தார்.
தற்போது நிலவியது போலவே முந்தைய தேர்தலின்போதும் எம்.எல்.ஏவாக இல்லாத சண்முகமே பாண்டிச்சேரிமுதல்வராக பொறுப்பேற்றார். சண்முகத்துக்காக புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏவான மல்லாடி கிருஷ்ணராவ்தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தனது தொகுதியான ஏனாம் தொகுதியை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடித்தார். தனக்காக எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து தன்னை முதல்வராக நீடிக்க உதவிய மல்லாடி கிருஷ்ணராவுக்கு வீட்டு வசதி வாரியத்தலைவர் பதவியை வழங்கினார் சண்முகம்.
இதையடுத்து சண்முகத்துக்கும் மல்லாடி கிருஷ்ணராவுக்கும் இடையே நல்ல நட்பு நிலவி வந்தது. இந்நிலையில்இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
அதன் பின் ஏனாம் தொகுதியை சண்முகம் வேண்டும் என்றே புறக்கணிப்பதாக கிருஷ்ணராவ் புகார் கூறஆரம்பித்தார். கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்கிருஷ்ணராவ்.
அதிமுக, தமாகா, காங்கிரஸ் கூட்டணியின் முதல்வராக எம்.எல்.ஏ. அல்லாத சண்முகம் மீண்டும் முதல்வராகபதவியேற்றதால் கோபமடைந்தார் கிருஷ்ணராவ்.
இதையடுத்து, சண்முகத்தை முதல்வர் பதவியிலிருந்து இறக்கும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என்று சபதம்செய்தார். தனது சபதம் காரணமாக கடந்த 5 மாத காலமாக தாடியை மழிக்காமல் இருந்தார் அவர்.
இந்நிலையில் சண்முகத்துக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. எவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராகஇல்லாத காரணத்தால் சண்முகம் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
சண்முகம் முதல்வர் பதவியிலிருந்து இறங்கியதும் தன் சபதம் நிறைவேறிவிட்டது என்று கூறி 5 மாத காலமாக தான்வளர்த்து வந்த தாடியை ஞாயிற்றுக்கிழமை மழித்துக் கொண்டார் மல்லாடி கிருஷ்ணராவ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications