தாக்குதலை உடனே நிறுத்த ரஷ்யா-சீனா அவசர அழைப்பு

Subscribe to Oneindia Tamil

பீஜிங்:

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவும் சீனாவும் அவசர அழைப்புவிடுத்துள்ளன.

பீஜிங்கில் நடந்து வரும் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ரஷ்ய அதிபர்புடினும் சீன அதிபர் ஜியாங் ஜெமினும் சந்தித்துப் பேசினர்.

முன்னதாக இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் இந்தத் தலைவர்களுடன்தனித்தனியே பேச்சு நடத்தினார்.

இந் நிலையில் புடினும் ஜியாங் ஜெமினும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். பிரச்சனைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காணநடவடிக்கைகள எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சீனாவுடன் சேர்ந்து இப்படிப்பட்ட அறிக்கை விட்டுள்ளதால் தீவிரவாதத்துக்கு எதிரான ரஷ்யாவின் நிலையில் எந்தமாற்றமும் இல்லை என ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரி அலெக்ஸான்டர் லொவாயானேவ்கூறுகையில், தீவிரவாதத்தை எதிர்த்து ரஷ்யா தொடர்ந்து போராடும் என்றார்.

அமெரிக்கத் தாக்குதல்களை சீனா ஆரம்பித்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. சீனாவுடன் மிகப் பெரியஎல்லையைக் கொண்டுள்ள ரஷ்யா அந் நாட்டுடன் உறவை மேம்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாகத் தான்கூட்டாக அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்து அறிக்கை விட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் அமெரிக்காவை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கும் சீனாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா தெரிவித்துள்ள ஆதரவுதான் இது எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+