6 மேயர்களும் நாளை பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 6 மாநகராட்சி மேயர்களும், அனைத்து நகராட்சித் தலைவர்களும் நாளை(வியாழக்கிழமை) பதவியேற்கிறார்கள்.

துணை மேயர், நகராட்சித் துணைத் தலைவர், நகராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆகியபதவிகளுக்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 3 மாநகராட்சிகளைஅதிமுக கைப்பற்றியுள்ளது. சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளை திமுகவும், திருச்சியை தமாகாவும்கைப்பற்றியுள்ளன.

இந்த 6 மாநகராட்சிகளுக்கான மேயர்களும் நாளை பதவியேற்கிறார்கள். சென்னை மேயர் ஸ்டாலினுக்குசென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதேபோல அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் அந்தந்த மாநகராட்சி மேயர்களுக்குப் பதவிப் பிரமாணம்செய்து வைப்பார்கள்.

நகராட்சித் தலைவர்களும், கவுன்சிலர்களும் நாளை பதவியேற்றுக் கொள்கிறார்கள்.

மாநகராட்சிகளில் சேலத்தை தவிர மற்ற மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர்மேயரின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சேலத்தில் தான் மேயரும், பெரும்பான்மையானஉறுப்பினர்களும் அதிமுகவினராக இருக்கின்றனர்.

சென்னையில் அதிமுக கூட்டணிக்கு 82 பேரும், திமுக கூட்டணிக்கு 64 பேரும் உள்ளனர். இந்நிலையில் துணைமேயர் பதவி அதிமுகவுக்குத் தான் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் திமுக துணை மேயர் தேர்தலில்போட்டியிடுவதே சந்தேகமாக உள்ளது. இதே நிலைமைதான் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும்திருநெல்வேலியிலும் உள்ளது.

மேலும் மதுரையிலும், திருநெல்வேலியிலும் சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்றால் தான் அதிமுகவோ, திமுகவோதுணை மேயர் பதவியில் வெற்றிபெற முடியும். எனவே 2 கட்சிகளும் அதற்கான வேலையில் மும்முரமாகஇறங்கியுள்ளன.

சுயேச்சைகள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்ற நிலை உருவாகியுள்து.

அனைத்து துணைமேயர்கள், நகராட்சித் துணைத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+