பெங்களூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு புரளி- ஒருவர் கைது
பெங்களூர்:
கொல்கத்தாவிலிருந்து பெங்களூர் வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் வெடிகுண்டுவைத்து இருப்பதாக வந்த புரளியையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) மாலைகொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்துகொண்டிருந்தது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், பெங்களுர் வந்தவுடன் அதுவெடிக்கும் என்றும் பெங்களூர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஒரு மர்ம போன் வந்தது.
உடனே இதுறித்து ஐதராபாத் விமான நிலையத்தை அதிகாரிகள் தொடர்புகொண்டு, அந்த விமானத்தை அங்கேயேதரையிறக்கி, வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து அந்த விமானம் ஐதராபாத்தில் தரையிறக்கப்பட்டு, துருவி துருவி சோதனை செய்யப்பட்டது. ஆனால்விமானத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பிறகு இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட புரளி என்றுதெரியவந்தது.
இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு போன் செய்த ஆசாமியின் மொபைல் போன் நம்பர்கண்டறியப்பட்டு, அவரது விலாசமும் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு உடனே அந்த நபரைப் போலீஸ்வலைவிரித்துப் பிடித்தது.
விசாரணையில் அவர் பெயர் சாய் மயூர் ராஜா என்றும், பெங்களூர் கம்மனஹள்ளியில் வசித்து வருகிறார் என்றும்தெரியவந்தது. போலீசார் அவரைக் கைது செய்து தீவிரவாதிகளுக்கும், அவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றுதீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications