கும்பகோணம் அருகே புதருக்குள் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சாக்கு மூட்டையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு ஆண் குழந்தைகண்டெடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் மேலக்காவேரி கே.எம்.எஸ். நகர் அருகே கருவேலமரக்காடு உள்ளது. அந்தப் பகுதியில்சிறுவர்கள் நேற்று (திங்கள்கிழமை) பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் விளையாடியபந்து அந்தப் பகுதியில் உள்ள முட்புதருக்குள் சென்றது.
அந்தப் பந்தைத் தேடிச் சென்ற சிறுவர்கள் புதருக்குள் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதையும், அதிலிருந்து குழந்தையின்அழுகைச் சத்தம் கேட்பதையும் அறிந்து அதிர்ந்தனர்.
பிறகு இதுபற்றிஅந்தப் பகுதியைச் சேர்ந்த பெரியவர்களிடம் கூறியதையடுத்து, அப்பகுதி மக்கள் திரளாகச் சென்றுஅந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தார்கள். அதற்குள் செக்கசெவேல் என்று ஆண் குழந்தை ஒன்று பசியால் கதறிக்கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்த சீவல் வியாபாரி சேக் அலாவுதீன் மற்றும் அவரது மனைவி ரஷ்யாபேகம் ஆகியோர் எடுத்து வளர்க்க முன்வந்தனர்.
மேலும் இதுகுறித்துப் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார், பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில்அந்த ஆண் குழந்தையைத் தூக்கி எறிந்தது யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒருவேளை அந்தக்குழந்தை கள்ளக் காதலில் பிறந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications