போக்குவரத்து விதிமுறைகள் பள்ளிப் பாடங்களாக வேண்டும் - முத்துக்கருப்பன்
சென்னை:
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளிக் கூடங்களில் பாடம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.
போக்குவரத்து விதிமுறைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில்ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கருத்தரங்கை தொடங்கி வைத்துமுத்துக்கருப்பன் கூறியதாவது:
இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன. மக்களிடையே சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்ற விழிப்புணர்ச்சி இல்லாமைதான் இதற்குக் காரணம்.
சிறுவயதில் இருந்தே, பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காகபள்ளிப் பாடப் புத்தகங்களில் போக்குவரத்து விதிமுறைகளையும் ஒரு பாடமாகச் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 570 பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். 3,500 பேர்காயமடைகின்றனர். போக்குவரத்து போலீஸார் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சாலை விபத்தில்இறப்போரின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க ஒவ்வொருவரும் முயல வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறினால்உயிரிழப்புதான் ஏற்படும்.
நாட்டில் இயற்கைச் சீரழிவுகள், போர் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக மக்கள் மற்றும்காவல்துறையினர், ராணுவத்துறையினர் இறப்பதைவிட, சாலை விபத்துக்களில் அதிகம் இறக்கின்றனர்.
இது அனைவருக்கும் வேதனையளிக்கக் கூடிய உண்மையாகும். இந்த நிலையை மாற்ற பொதுமக்கள் முழுஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கருத்தரங்கில் கலந்துகொண்ட பொதுமக்கள் கேட்ட பலகேள்விகளுக்கு முத்துக்கருப்பன் பதிலளித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications