பாகிஸ்தான் படைகள் குவிப்பு: எல்லையில் பதற்றம்
ஜம்மூ:
இந்திய எல்லையின் அருகே 10 கி.மீ. தூரத்தில் தனது படைகளை பாகிஸ்தான் குவித்துள்ளது. காஷ்மீரிலும்ராஜஸ்தானிலும் இந்தப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
எல்லைக்கு மிக அருகில் பாகிஸ்தானிய விமானப் படை விமானங்கள் அடிக்கடி பறந்து சென்ற வண்ணம் உள்ளன.இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
டாங்கிகள், கவச வாகனங்கள் ஆகியவை 3 நாட்களுக்கு முன் 40 முதல் 25 கி.மீ. தூரத்தில் இருந்தன. இப்போதுஇவை எல்லையில் இருந்து 10 தூரத்தை நெருங்கியுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியாதாக்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்தியாவில் ஆதரவு பெருகி வருகிறது.
அமெரிக்காவை ஆதரிப்பதால் நாடு முழுவதும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் ஆளாகியுள்ளார். தனது உள் நாட்டுப் பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பவும், இந்தியராணுவம் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்குவதைத் தடுக்கவும் இந்தியாவுக்கு எதிராக முஷாரப் படைகளைநிறுத்தி வருவதாகக் கருதப்படுகிறது.
நவாஸ் ஷெரீபின் ஆட்சி காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப் தான், கார்கில் ஊடுவலைத் திட்டமிட்டுநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வரும் இந்திய ராணுவம் பதிலுக்குப் படைகளைக் குவிக்கவில்லை.ஆனால், பாகிஸ்தான் ஏதாவது தாக்குதலில் ஈடுபட்டால் பதிலடி தர தயார் நிலையில் ராணுவம் வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக இந்தியா கருதுகிறது.
பரூக் அப்துல்லா கவலை:
எல்லையின் அருகே பாகிஸ்தான் தனது படைகளைக் குவித்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள காஷ்மீர்முதல்வர் பரூக் அப்துல்லா, மீண்டும் ஒரு கார்கில் போருக்கு பாகிஸ்தான் தயாாகி வருகிறது என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications