ஆப்கானுக்குள் புகுந்த பாகிஸ்தானிய மதவாதிகள்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி வழியாக மேலும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய மதவாதிகள்ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியுள்ளனர்.
கடந்த வார இறுதியில் மட்டும் சுமார் 4,400 பாகிஸ்தானிய பழங்குடியினர் "ஜிகாத்" கோஷங்களுடன்ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் ஆயிரக்கணக்கான மதவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ள தலிபான் படையினருடன் இவர்கள் ஐக்கியமாகிஅமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கவுள்ளனர்.
இதுவரை சுமார் 12,000 பேர் இவ்வாறு ஊடுருவியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானமதவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் செல்வதற்காக எல்லைப் பகுதிகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தாக்குதல் நின்றாலும் பட்டினிச் சாவுகள் தொடரும்
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்திக் கொண்டாலும், அங்கு பட்டினிச் சாவுகள் தொடரும்என்று கூறப்படுகிறது.
60 முதல் 80 லட்சம் ஆப்கானியர்கள் ஏற்கனவே பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், ஆயிரக்கணக்கான பட்டினிச்சாவுகள் தொடரத்தான் செய்யும் என்று சில தன்னார்வ அமைப்புகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications