பொன்னையனுக்கு கருணாநிதி சரமாரி கேள்வி
சென்னை:
விவசாயிகளின் நெல்லை உரிய விலையோடு, முடிந்தவரை அவர்களிடமிருந்து வாங்க வேண்டும் என தமிழகநிதியமைச்சர் பொன்னையனுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பொன்னையன், திமுக ஆட்சிக்காலத்தில் தான் தேவைக்கதிகமாக நெல்லை வாங்கி, அரசுபணம் வீணடிக்கப்பட்டது என்றும், தமிழகத்தில் தீவிரவாதம் வளர திமுக தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக தலைவர் கருணாநிதி ஒருஅறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் நெல்லை உரிய விலைக்கு , தேவைக்கு அதிகமாக வாங்கப்பட்டது என்றுபொன்னையன் கூறியிருக்கிறார். விவசாயிகளின் நெல்லை, அரசின் தேவைக்கேற்ப மட்டும் வாங்கினால், பிறகுவிவசாயிகளின் கதி என்னாவது?.
ஜெயலலிதாவுக்கு , இ-மெயிலில் கொலை மிரட்டல் வருவதற்கு காரணம், திமுக ஆட்சியில் வளர்த்துவிடப்பட்டதீவிரவாதம் என்றிருக்கிறார். இந்த மிரட்டலில் ஈடுபட்ட தமிழ்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பைதடைசெய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறது. இதற்கு அதிமுக சார்பில் தடைசெய்யலாம் என்று பொன்னையன்சொல்லத் தயாரா?.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நேரு ஸ்டேடியம் கட்டப்பட்டபோது, டெண்டர் கோரப்படாமலேயே காண்டிராக்ட்விடப்பட்டது அமைச்சருக்குத் தெரியாதா?.
இவ்வாறு கருணாநிதி, அமைச்சர் பொன்னையனுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications