மத்திய அரசை கவிழ்க்கப் போறேன்: சுவாமி
சென்னை:
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள 4 கட்சியினர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கஆதரவு அளிப்பதாக என்னிடம் கூறியுள்ளனர் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
இதையடுத்து விரைவில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கவிழும் என்றார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் 4 கட்சியினர் காங்கிரஸ் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைந்தால் அதற்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் யார் என்று நான் இப்போது கூற விரும்பவில்லை. இந்த 4 கட்சியினருக்கு மொத்தம் 37எம்.பிக்கள் இருக்கிறார்கள். பா.ஜ.கவை உடைத்து 72 எம்.பிக்களை வெளிக் கொணர முடியும் என்ற நம்பிக்கைஎனக்கு உள்ளது.
பிரதமர் வாஜ்பாயின் ரஷ்ய பயணம் எந்த பயனையும் கொடுக்கப்போவதில்லை. அமெரிக்காவின் அழைப்பைஏற்று அவர் அமெரிக்கா செல்ல சம்மதித்ததும் தவறு.
இந்தியாவில் தலித்துகள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து அதிக அளவில் போதைபொருட்கள் கடத்தப்படுகின்றன என்று அமெரிக்கா கூறியுள்ள நிலையில் வாஜ்பாய் அமெரிக்க அழைப்பை ஏற்றுஅங்கு சென்றுள்ளது தவறு.
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க நமக்கு 3வது நாட்டின் உதவி தேவையில்லை.
ஜெயலலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழகஅரசு உத்தரவிட வேண்டும்.
1994ம் ஆண்டு காட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்படாவிட்டால் தோகாவில் நடக்கும் உலகவர்த்தக அமைப்பு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வேன் என்று மத்திய அமைச்சர் முரசொலி மாறன்கூறியிருப்பது தவறானது. அவர் அது போல் செய்தால் உலக சந்தையில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுவிடும்என்றார் சுவாமி.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications