போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் பஸ்கள் ஓடவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

20 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில்இறங்கியுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ் தொடர்பாக போக்குவரத்துக் கழகங்களுடன் போக்குவரத்து அமைச்சர் நயினார் நாகேந்திரனும்அதிகாரிகளும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் ஊழியர் சங்கத்தினருடன் பல சுற்றுப் பேச்சு நடத்தினர்.

கடந்த 3 நாட்களாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க அரசுமறுத்துவிட்டது. இதையடுத்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கோரி வருகின்றனர். ஆனால், அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் தரவே பணமில்லாமல் கடும் நிதி நெருக்கடியில் திணறி வரும தமிழக அரசு 20 சதவீத போனஸ் தரமறுத்துவிட்டது.

அதே போல தீபாவளி முன் பணம் (அட்வான்ஸ்) ஊழியர்கள் கேட்ட அளவுக்குத் தர முடியாது என அரசுகூறிவிட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இதனால் தமிழகமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது. பஸ்கள் வராததால் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்ஸ்டாண்டுகளிலும் சாலைகளிலும் நின்ற வண்ணம் உள்ளனர்.

அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும் முழு அளவில்பணிக்கு வரவில்லை. இதனால், ஒரு சில பஸ்கள் மட்டும் தான் இயங்குகின்றன.

வெளியூர்களுக்குச் சென்றிருந்தவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பஸ் ஸ்டாண்டுகளில்குவிந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+