பாகிஸ்தானின் பயங்கரவாதம் பற்றிப் பேச அமெரிக்கா மறுப்பு: இந்தியா ஏமாற்றம்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் புஷ்ஷூம், இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பற்றியும், அதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதைப்பற்றியும் எதுவும் கூறப்படவில்லை.
பேச்சுவார்த்தை முடிந்ததும் இருவரும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது அமெரிக்க அதிபர் புஷ் நிருபர்களிடம் கூறுகையில்,
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவும் கிடைக்கும். கடந்த அக்டோபர்1ம் தேதி, காஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தீவிரவாதத்தைப் பொறுத்தமட்டில், அது அமெரிக்காவில் நடந்தாலும் உலகத்தில் வேறு எங்கு நடந்தாலும்ஒன்றாகத் தான் நாங்கள் கருதுகிறோம்.
இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் வாஜ்பாய் விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று விரைவில் நான் இந்தியாசெல்லவிருக்கிறேன் என்றார்.
பிறகு இருநாடுகளின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,
தீவிரவாதத்தையும், மதங்களையும் ஒன்றுபடுத்திப் பேசும் நாடுகளையும் தலைவர்களையும் கண்டிக்கிறோம். அணசக்தியை ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தும் இந்தியாவின் திட்டங்களுக்கு உதவுவோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், காஷமீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதைக் கண்டிக்கும் வரியை இதில் சேர்க்க இந்தியா முயன்றது. ஆனால், இதை அமெரிக்கா ஏற்கவில்லை என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications