போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி: பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
தமிழக அரசுக்கும், போக்குரத்துத்துறை தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையேநடைபெற்ற போனஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுக்த்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக திமுக மற்றும் சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கங்கள்முடிவெடுத்துள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டிஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் போக்குவரத்துத்துறை செயலாளர் இளங்கோவன், அண்ணா தொழிற்சங்கபேரவை திமுக மற்றும் சி.ஐ.டியூ. உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையேகடந்த இரண்டு நாட்களாக நடந்துவந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) முன்றாவதுநாளாக பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது 8.33 சதவிகிதம் போனஸ்தான் வழங்கப்படும் என்றுபோக்குவரத்துத்துறை அமைச்சர் கூறினார்.
இதை ஏற்க தொழிற் சங்கத்தினர் ஏற்க மறுத்ததால் போனஸ் பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறைஅமைச்சர் கூறுகையில், கடந்த திமுக அரசின் தவறான கொள்கை காரணமாக அரசுக்குரூ 897 கோடி இழப்பு ஏற்பட்டது.
அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும்போக்குவரத்து கழக ஊழியர்களக்கு ரூ 1000 முன் பணமாக வழங்கப்பட்டது.
அனைத்துரை ஊழிய.ர்களுக்கும் போனாசாக 8.33 சதவிகிதம் போனஸ் கொடுக்கவேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. தொழிற் சங்கத்தினர் கேட்ட அளவுக்குபோனஸ் கொடுக்க முடிடியாத சூழ்நிலை நிலவுகிறது.
தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை மக்கள் விரும்பமாட்டார்கள்.
அண்ணா தொழிற் சங்க பேரவையினர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள்ஜெயலலிதா மீதி நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் உதவியுடன் போராட்டம்சமாளிக்கப்படும் என்றார்.
திமுக (தொ. மு .ச) தொழிற் சங்க தவைவர் செ.குப்புசாமி கூறுகையில், போனஸ்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நாங்கள் 20 சதவிகிதம் போனஸ்கேட்டோம். ஆனால் எல்லோருக்கும் 8.33 சதவிகிதம் போனஸ்தான் தரமுடிடியும் என்றுஅரசு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. போக்குவரத்துத்துறைதொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தத்தை திணித்துள்னர். வேலை நிறுத்தம் இப்போதுமுதலே தொடங்குகிறுத தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறும் என்றார்.
சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத் தலைவர் ஏ. சவுந்தரராஜன் கூறுகையில், நாங்கள் அதிகபோனஸ் கேட்கவில்லை. கடந்த 3 வருடங்களாக கொடுக்கப்பட்டுவருவதைகொடுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டோம்,
ஆனால் அதை ஏற்க அரசு மறுத்துவிட்டது. 20 சதவிகிதம் போனஸ் கூட தர அரசுமறுத்துவிட்டது, எனவே போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு நாங்கள்தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications