அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா போரில் இறங்காது
வாஷிங்டன்:
ஆப்கானுக்கு எதிரான போரில் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக இந்திய இந்தியப் படை அனுப்பப்படும்என்று கூறப்படுவதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் மறுத்தார்.
அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மணி மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இராணுவத்தைஅனுப்பியுள்ளன.
அதுபோல இந்தியாவிலிருந்தும் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பப்படும் என்றுகூறப்படுகிறது. இதை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் உறுதி செய்தன. ஆனால் வாஷிங்டனில் அமைச்சர்ஜஸ்வந்த் சிங் இதை மறுத்துள்ளார்.
தற்போது, அமெரிக்க விமானங்கள் இந்திய எல்லைக்குள் பறக்கவும், அவை இந்தியாவில் எரிபொருள்நிரப்பிக்கொள்ளவும் இந்தியா அனுமதித்துள்ளது. பல அமெரிக்க போர் விமானங்கள் இந்திய விமானத்தளங்களில் இறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்லவும் ஆரம்பித்துவிட்டன.
இதேபோல அமெரிக்கப் போர்க் கப்பல்களுக்கும் இந்தியாவில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள தற்போது அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கப் போர்க்கப்பல்களுடன் இணைந்து, இந்தியக் கப்பல்களும் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்குமுதலில் இந்தியத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் ஓய்வுக்காக இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்துவதையும்,அமெரிக்கப் போர்க் கப்பல்களின் பாதுகாப்பிற்கு, இந்தியக் கப்பல்கள் அனுப்பப்பட வேண்டும் என்ற அமெரிக்கஅரசின் கோரிக்கையையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால், இதை உறுதி செய்ய அரசு மறுக்கிறது. அமெரிக்காவுக்கு செய்யப்படும் உதவிகளை இந்தியா வெளியில்உறுதிப்படுத்தாது என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications