ரேஷன் கடை ஊழியர்களும் நாளை முதல் ஸ்டிரைக்
சென்னை:
20 சதவிகித போனஸ் கோரி தமிழக சிவில் சப்ளை ஊழியர்கள் நாளை (திங்கள்கிழமை) முதல் காலவரையற்றவேலை நிறுத்ததத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி மாநிலத் தலைவர் ஏ.எம்.கோபு, பொதுச் செயலாளர் சி. சந்திரகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் மட்டும் வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. சென்ற ஆண்டு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளது. 20 சதவிகிதபோனஸ் வழங்கக் கோரி சிவில் சப்ளை ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்ஈடுபடுகின்றனர்.
காவிரிபாசன கொள்முதல் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்கள் முழுமையாக இயங்காது. மாநிலம்முழுவதுமுள்ள கிடங்குகள், நவீன அரசி ஆலைகள், சிவில் சப்ளைஸ் மூலம் நடைபெறும் நகர்ப்புற நியாய விலைக்கடைகள், அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அலுவலகங்களும் இயங்காது.
திங்கள்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications