இலங்கை விமான தளம் தகர்ப்பு: 31 அதிகாரிகள் நீக்கம்
கொழும்பு:
கடந்த ஜூலை 24ம் தேதி இலங்கை கடுநாயகே விமான தளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போதுபணியில் இருந்த 31 விமானப்படை அதிகாரிகளை அதிபர் சந்திரிகா பதவிநீக்கம் செய்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 2 கபிர் ரக போர் விமானங்கள், ரஷ்யாவில் தயாரான மிக்-27 ரகவிமானம், 2 எம்.ஐ.-17 ரக ஹெலிக்காப்டர்கள், மற்றும் சைனாவில் தயாரான 3 விமானங்கள் எரிந்து சாம்பலாயின.மேலும் 4 ஏர்பஸ் விமானங்களும் எரிந்து சாம்பலாயின.
இத்தாக்குதல் சம்பவம் காரணமாக இலங்கை அரசுக்கு ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் வெடிகுண்டுகளை உடம்பில் கட்டிக் கொண்ட மோதி இந்தத்தாக்குதலை நடத்தினார்கள். இதில் மொத்தம் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 14கரும்புலிகள் பலியானார்கள்.
இதுகுறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தத் தாக்குதல் குறித்து நீதி விசாரணைநடத்த 5 பேரைக் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
இன்னும் விசாரணை முழுமையாக செய்து முடிக்கப்படாத நிலையில் தற்போது விசாரணையில் கிடைத்த தகவல்களைஅடிப்படையாகக் கொண்டு, ஏர் மார்ஷல் ஜயலத் வீரக்கோடியின் பரிந்துரையின் பேரில் 31 விமானப் படைஅதிகாரிகளை அதிபர் சந்திரிகா பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில் கடுநாயகே விமா தளத்தின் கமாண்டராக இருந்த ஆர்.ஏ.அனந்தா குறிப்பிடத் தக்கவர். நீக்கப்பட்டமற்றவர்களில் 4 பேர் உயர் அதிகாரிகள், எஞ்சிய 26 பேர் கீழ் மட்ட ஊழியர்கள் ஆவர்.
இந்தத் தாக்குதல் குறித்து ஏர் மார்ஷல் விஜிதா டெனக்னான் தலைமையிலான குழு 283 சாட்சிகளிடம் விசாரித்து,1000 பக்க அளவிளான குற்றப்பத்திரிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளது.
விமான தளத்தின் பாதுகாப்பில் அதிகாரிகள் காட்டிய மெத்தனப் போக்கே, புலிகள் எளிதாக உள்ளே நுழையகாரணமாக இருந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications