காஷ்மீர் பிரச்சனை: இந்தியாவுடன் மீண்டும் பேச பாகிஸ்தான் பிடிவாதம்
நியூயார்க்:
காஷ்மீர் பிரச்சனை குறித்து மீண்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக,அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபர் முஷாரப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுபேசினர். காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் அதிபர் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது,
காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஒரு கையால்ஓசை எழுப்ப முடியாது. எனவே இதை இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் உணரவேண்டும்.
சமீபத்தில் ஆக்ராவில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் இருந்து இந்தியாபின்வாங்கியுள்ளது. நாங்கள் பிரதமர், வாஜ்பாயையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த சிங்கையும் எங்கள்நாட்டுக்கு வருமாறு அழைத்தோம். வருவதும் வராததும் அவர்கள் இஷ்டம்.
காஷ்மீர், போஸ்னியா, கொசாவோ, பாலஸ்தீனம் மற்றும் பல இடங்களில் உள்ள அரசியல் பிரச்சனைகள்தீர்க்கப்படாமல் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக இவை எல்லாம் முஸ்லீம் மக்களைச் சார்ந்த பிரச்சனைகளாக உள்ளன.
காஷ்மீரைப் பொறுத்தவரை இந்தியாதான் அங்கு தீவிரவாதத்தைத் தொடர்ந்து தூண்டி வருகிறது. இப்போதேஅதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 75,000 அப்பாவிக் காஷ்மீர் பொதுமக்கள் இந்திப்பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனமும், காஷ்மீரும் தான் உலகில் தற்போது மிக அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள்.இதை உலக நாடுகள் அனைத்தும் உணரவேண்டும்.
அணு ஆயுதங்களை சோதனை செய்வதை தடைசெய்வது குறித்து, நாங்கள் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தகொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்றார் முஷாரப்.
காஷ்மீர் விவகாரத்தில் உதவுவேன்: புஷ்
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் புஷ்சுடன் பேச்சுவார்த்தை நடத்திய முஷாரப், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகஅமெரிக்கா உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இப்பிரச்சனையில் ஒரு நல்ல முடிவு கிடைக்க நான் 2 நாடுகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன்என்று புஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications