கைதான பஸ் தொழிலாளர்களை விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
பேருந்து ஊழியர் வேலை நிறுதத்தையொட்டி கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்துத்துறை தொழிலாளர்களைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கும், போக்குவரத்துத்துறை தொழிற் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடைபெற்ற போனஸ்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளர்.இது தொடர்பாக ராமதாஸ் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை மற்றும் திருமண காலத்தில் வேலை நிறுத்தம் உருவாகியுள்ள சூழ்நிலையை அரசு தவிர்த்திருக்கவேண்டும். இந்த வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல, பொதுமக்களும் பெரும்அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் போனஸ் பிரச்சனை குறித்து அரசு நல்ல தீர்வு கண்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்குகொண்டுவர வேண்டும்.
சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட போனசை விட அதிக போனஸ் தரப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள்எதிர்பார்ப்பது இயற்கைதான். ஆனால் அரசு சென்ற ஆண்டு வழங்கியதை விட குறைவாக போனஸ் வழங்கப்படும்கூறியிருப்பது ஏற்க முடியாதது.
எல்லாவற்றிற்கும் கடந்த ஆட்சி மீது குற்றம் சுமத்தி வருகிறது அதிமுக அரசு. அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதகாலம் ஆகிறது. நல்ல நிர்வாக திறமையுள்ள ஆட்சியால் எந்த நிர்வாக சீர் கேட்டையும் 6 மாத காலத்தில் சரிசெய்திருக்க முடியும்.
ஆனால் அதிமுக ஆட்சியாளர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் கடந்த ஆட்சி மீதே குற்றம் சுமத்திவருகிறார்கள்.
வேலை நிறுத்தத்தையொட்டி ஏராளமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கழக ஓய்வுஅறையில் தங்கியிருந்த தொழிலாளர்களும், பணிமனைகளிலிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் எந்த விதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றுராமதாஸ் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications