தேசிய பாதுகாப்பு: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
டெல்லி:
டெல்லியில் நடைபெற உள்ள முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய் தேசிய பாதுகாப்பு நிலவரம் குறித்துவிவாதிக்கவிருக்கிறார்.
தற்போது தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் போன்ற உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.இவற்றைத் தடுப்பது குறித்தும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பது குறித்தும் விவாதிக்கவரும் 16ம் தேதி டெல்லியில் அனைத்து முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் 17ம் தேதி பிரதமர்வாஜ்பாய் உரையாற்றுவார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது,
முதல்வர்கள் மாநாட்டின் போது தீவிரவாதிகள் தற்போது நடத்திவரும் உயிரியல், வேதியல் மற்றும் அணுஆயுதத்தாக்குதல் போன்ற பேரழிவுகளை உண்டாக்கும் தாக்குதல்களை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிவிவாதிக்கப்படும்.
மேலும் நமது அண்டை நாடான பாகிஸ்தானின் ஆதரவால் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும்எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் எல்லைதாண்டியபயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியத் தரப்பில் என்னென்ன மாற்று முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும்ஆலோசிக்கப்படும்.
மேலும் இவற்றைத் தடுப்பதிலும் எதிர்ப்பதிலும் என்னென்ன புதிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
புத்தக வடிவில் மாநாட்டின் தொடக்கத்தில் அனைவருக்கும் கொடுக்கப்படவுள்ள இதில் திட்டமிட்ட சதிகள்,ஊடுறுவல்கள் போன்ற தேசவிரோத செயர்லகளை தடுக்க மாநில அரசுகள், புலனாய்வுத்துறை கடலோரக்காவல்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் என்னென்ன அதிகாரங்களைவழங்கலாம் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள சட்டங்களைப் பற்றியும், தீவிரவாதத்தைத் தடுப்பதில் அவற்றை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு பிரதமர் கூட்டும் அனைத்து முதல்வர்களின் இரண்டாவது கூட்டமாகும். முதல் கூட்டம் கடந்தஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கூடியது என்பது குறிப்பிடத் தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications