பேரணி நடத்த முயன்ற பஸ் ஊழியர்கள் கைதாகி விடுதலை
சென்னை:
சென்னையில் தடையை மீறிப் பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழக ஊழியர்கள்நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு, பின்னர் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்கள், நேற்று பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இருந்தாலும் இத்தடையை மீறிப் பேரணியை நடத்துவோம்என்று போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
அதன்படி, பேரணி நடத்துவதற்காக நேற்று மாலை சென்னை-அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தைநோக்கி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சென்றனர்.
அங்கு செல்வதற்கு முன்னதாகவே அவர்களை வழிமறித்து போலீசார் கைது செய்தனர். அனைத்து போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்களின் முக்கியப் பிரதிநிதிகளான செளந்தரராஜன், குப்புசாமி, ரங்கராஜன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களைத் தவிர சென்னை நகர் முழுவதிலும் ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழக ஊழியர்களைப்போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அவர்களை அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடமிருந்துபெயர்-முகவரிகளைப் பெற்றுக் கொண்டு, சில மணி நேரம் கழித்து இரவில் விடுதலை செய்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications