வாக்காளர் பட்டியலில் வெளி நாட்டில் வசிப்பவர் பெயர்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் நடத்திய திடீர் சோதனையின்போது, வெளி நாட்டில் வசிப்பவரின் பெயரெல்லாம்வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த 5ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ்குமார் யாதவ் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி எவ்வாறுநடைபெறுகிறது என்பதைக் கண்காணிக்க முடிவு செய்தார்.

அதன்படி அவர் திடீரென்று அரியலூரில் உள்ள சில பகுதிகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, வெளிநாட்டில் வசிப்பவருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

இதேபோல் 18 வயது கூட நிரம்பாத ஒரு பையனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருப்பதைக் கண்டு கலெக்டர்அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களிடம் தவறான தகவல்களைக்கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் கலெக்டர்.

வயது குறித்த சந்தேகம் ஏற்பட்டால், வயதுச் சான்றிதழைக் கட்டாயம் காட்ட வேண்டும் என்றும் கலெக்டர்உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சந்தேகம் எதுவும் எழுந்தால், உடனடியாகத் தன்னை அணுகலாம் என்றும் அவர் மக்களைக்கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+