பேச்சுவார்த்தைக்கு வருகிறது ஹிஸ்புல் முஜாகிதீன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு மத்திய அரசுடன் பேச்சுநடத்த முன் வந்துள்ளதாகஉள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
அவர் கூறுகையில், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும் எந்த அமைப்புடனும் பேச்சுநடத்த அரசு தயாராகவே உள்ளது. தீவிரவாதத்தைக் கைவிட முன்வந்தால், அவர்கள் கடந்த காலத்தில் எப்படிசெயல்பட்டிருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அரசு அவர்களுடன் பேச்சு நடத்தும்.
1999ம் ஆண்டு நமது அண்டை நாட்டில் (பாகிஸ்தானில்) ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே காஷ்மீரில்தீவிரவாதம் பெருகிவிட்டது. கார்கிலில் கிடைத்த தோல்வியையடுத்து தீவிரவாதத்தை அந் நாடு ஊக்குவித்துவருகிறது என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications