சென்னை ரயில் நிலையத்தில் போலீஸ் உடையில் இருந்த பெண் கைது
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் உடையணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில்நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கைது செய்தனர்.
அவர் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் பிளாட் பாரத்தில்ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உடையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.
அவர் மீது சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை அழைத்து விசாரித்து, அவர் வைத்திருந்த கைப்பையைச்சோதனை செய்தனர்.
அதில் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை வீராங்கனைகளுக்கான அடையாள அட்டை இருந்தது. அதில்அவர் பெயர் பூனம் என்றும், நின்றுகொண்டிருந்த பெண்ணின் புகைப்படமும் இருந்தது.
போலீசார் அவரிடம் விசாரித்ததில், தனது பெயர் ரஷினா என்றும், கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அவர்கூறினார். டெல்லியில் ஒரு கல்லூரியில் படித்தபோது பெற்றோரின் எதிர்ப்பை மீறி ராஜிவ் என்பவரைத் திருமணம்செய்துகொண்டதாகவும் அப்போது ரயிலில் அனாதையாகக் கிடந்தது என்று ராஜிவ் கொண்டுவந்து கொடுத்ததுதான் அந்த சப்-இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் என்று கூறினார்.
தன்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ராஜிவ் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவரைத் தேடிவந்தபோது தான்வைத்திருந்த பணம் முழுவதும் செலவழிந்து விட்டது. அதனால் டெல்லிக்கு டிக்கெட் இல்லாமல் செல்வதற்காகபோலீஸ் உடையை உடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
போலீசார் ரஷினா கூறுவது உண்மையா, அல்லது இவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று தீவிரமாகவிசாரணை செய்து வருகின்றனர்.
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications