புகாரை வாபஸ் வாங்கியது ஏன்? - ஜீவஜோதி விளக்கம்
சென்னை:
ஓட்டல் அதிபர் ராஜகோபாலும், அவரது ஆட்களும் எங்கள் குடும்பத்தினரை மிரட்டியதால்தான் நான் போலீசில்கொடுத்த புகாரை வாபஸ் பெற விரும்பினேன் என்று கூறினார்.
சென்னையில் உள்ள சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் தன்னிடம் மேனேஜராகப் பணியாற்றிய ராமசாமிஎன்பவரின் மகளான ஜீவஜோதி என்ற பெண்ணை மிரட்டி மூன்றாவது திருமணம் செய்ய முயன்றார். ஜீவஜோதிக்குபிரின்ஸ் சாந்தகுமார் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
ராஜகோபாலின் தொடர் தொல்லை காரணமாகப் ஜீவஜோதி போலீசில் புகார் கொடுத்தார். பிறகு சில நாட்கள்கழித்து தனது புகாரை வாபஸ் பெறவிரும்பியதாகக் கூறப்படுகிறது. ஏன் தனது புகாரை வாபஸ் பெற விரும்பினேன்என்று ஜீவஜோதி கூறுகையில்,
மூன்றாம் தாரமாகத் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜகோபால் என்னைச் சித்திரவதை செய்தார்.இதனால் கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி நான் போலீசில் புகார் கொடுத்தேன்.
புகார் கொடுத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பும்போது ராஜகோபாலின் அடியாட்கள் எங்களைப்பின் தொடர்ந்து வந்தனர்.
அப்போது நாங்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். அந்த இடத்தைத் தெரிந்துகொண்ட ராஜகோபாலின் அடியாட்களில் ஒருவரான டேனியல் எங்களுக்கு உதவுவது போல நடித்தார். அவர்சொல்வதை நம்பி அவர் வரச் சொல்லியபடி சாய் பாபா கோயிலுக்கு அருகே சென்றோம்.
அப்போது ராஜகோபாலின் அடியாட்கள் பல பேர் சேர்ந்து எங்களை வடபழனிக்கு அழைத்துச் சென்றனர்.போலீசில் நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் பெற விரும்புவதாக மிரட்டி எழுதி வாங்கினார்கள். மேலும் ஐந்துவெற்றுத் தாள்களில் என்னிடமும், என் கணவர், அப்பா, அம்மா, தம்பி ஆகியோரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.
ராஜகோபால் எங்களுக்கு உதவி செய்யும் போதெல்லாம் மகளாக நினைத்துச் செய்கிறேன் என்று கூறி எங்களைநம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்.
என்னையும் எனது கணவரையும் கடந்த மாதம் 26ம் தேதி திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகுசென்னைக்கு கொண்டு வந்து என்னையும், என் அப்பா, அம்மா ஆகியோரை வேளச்சேரியில் ஒரு வீட்டில்அடைத்து வைத்திருந்தார்கள். அன்று முதல் இன்று வரை எனது கணவரைக் காணவில்லை.
இவ்வாறு ஜீவஜோதி கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications