தமிழகத்தில் இன்று பந்த்: ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை:
பஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் பொது வேலை நிறுத்தம்வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.
ஆனால், பொது மக்கள் ஆதரவோ, பிற அரசு ஊழியர்களின் ஆதரவோ இல்லாததால் இந்த பந்த் முழுத் தோல்வி அடையும் என்றுதெரிகிறது.
20 சதவீத போனஸ் கேட்டு பஸ் தொழிலாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களைக் கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள்தோல்வியடைந்துவிட்டன.
அரசுக்கும் போராட்டம் நடத்தும் தொழிலாளர்களுக்கும் இடையே சிக்கி மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள போக்குவரத்து ஊழியர்கள் இன்று பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு திமுக, மதிமுக, பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் கட்சிகள் ஆகியவை ஆதரவுதெரிவித்துள்ளன.
பொது வேலை நிறுத்தத்தின்போது யாராவது வன்முறையில் ஈடுபட்டாலோ, பஸ்களை தடுத்து நிறுத்த முயற்சித்தாலோ, பஸ்களைசேதப்படுத்த முயன்றாலோ அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறைதண்டனைவிதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநில டி.ஜி.பி.நெய்ல்வால் கூறினார்.
இவர்கள் தவிர தொழிற்சங்கத்தினர் உள்பட மேலும் 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பந்த்தில் இதுவரை வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லை. அமைதியாகவே நடந்து வருகிறது. மாநிலம்முழுவதும் கடைகள் வழக்கம் போல் திறந்துள்ளன. அரசு, தனியார் அலுவலகங்கள் இயங்குகின்றன.
பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொது வேலைநிறுத்தம் பல தொழில் நிறுவனங்களில் துவங்கி விட்டது.இந்த பொது வேலை நிறுத்தத்தை மிகவும் அமைதியாக நடத்த சி.ஐ.டி.யூ., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்டதொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளன.
கடையடைப்பு இல்லை:
பொது வேலை நிறுத்தத்தில் கடையடைப்பு இருக்காது என்று வணிகர் சங்கங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
மாநிலம் முழுவதிலும் போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும்உடனடியாக அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்றை கட்டுக்கடங்காமல் போனால் கடுமையாக நடந்து கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசுடன் போனஸ் உடன்பாடு செய்து கொண்டுள்ள 7 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்வெள்ளிக்கிழமை முதல் பணிக்குத் திரும்புகின்றனர். இதனால் பஸ் போக்குவரத்தில் ஓரளவு சுமூக நிலை ஏற்படும் என்றுதெரிகிறது.
அதிமுக, காங்கிரஸ், தமாகா ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
இந்தப் போராட்டத்தின் மூலம் அரசைப் பணிய வைக்க மார்க்சிஸ்ட், திமுக ஆதரவு தொழிற்சங்கங்கள் தீவிரமாகியுள்ளன. அதேசமயம், இன்று கூடுதல் பஸ்களை ஓட்டி பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசுமும்முரமாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications