மதுரை சிறையில் டாக்டர் கிருஷ்ணசாமி - கோவை, நெல்லையில் பதட்டம்
சென்னை:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது தொடர்பாக நெல்லை, கோவை மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
அவர்கள் அசம்பாவிதச் சம்பவங்களில் ஈடுபட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு தமிழக போலீசார் பதட்டமானஇடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணசாமி கைதைக் கண்டித்து வால்பாறை பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. பிற வாகனங்களும் கூட அவ்வளவாக இயக்கப்படவில்லை.
அங்கு வன்டுறை மூண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு ஆயுதப் போலீசார் அதிக அளவில் ரோந்து சுற்றி வந்தனர்.
இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் லேசான பதற்றம் காணப்பட்டது. புதிய தமிழகம்தொண்டர்கள் ஆங்காங்கே கூடி கைதைக் கண்டித்துக் கோஷம் எழுப்பினர். அவர்களை போலீஸார்சமாதானப்படுத்தி அனுப்பினர்.
டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை சிறையில் அடைப்பு
முன்னதாக, கோவையில் கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரைசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்ய ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவைகுனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்த போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட டாக்டர் கிருஷ்ணசாமி நேராக கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 28ம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி இரவோடு இரவாக மதுரை கொண்டு வரப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
முன்னதாக கோவில்பட்டியில் நிருபர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, தான் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications