அமெரிக்கா ஹெலிகாப்டரின் அத்துமீறல்: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு
சென்னை:
சென்னை மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய வான் பகுதிகளில் அனுமதி இல்லாமல் அமெரிக்க ஹெலிகாப்டர்பறந்ததற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ள யு.எஸ்.எஸ். ஜான் யங் என்ற போர்க்கப்பலில்உள்ள ஹெலிக்காப்டர் ஒன்று சென்னை வான் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை பறந்தது.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தையும் சோதனையிட்டது.
அனுமதி இல்லாமல் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டரை ராடார் மூலம்கண்டறிந்து, அதனுடன் தொடர்பு கொள்ள விமான நிலைய அதிகாரிகள் முயற்சித்தனர்.
ஆனால் அந்த ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் பதில் ஏதும்கூறவில்லை. இதனால் அதிகாரிகள் பாதுகாப்புத் துறைஅமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அந்த ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.ஆனால் பாதுகாப்புத் துறையும் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தஅமெரிக்கப் போர்க்கப்பலில் சென்று இறங்கியது.
அமெரிக்க ஹெலிகாப்டரின் செயலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் இதுகுறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் வேறு கருத்து: அதே நேரத்தில் இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவுத்துறைவேறு கருத்தைத் தெரிவித்துள்ளது.
அவர்கள் கூறுகையில், வேண்டுமென்றே இந்த ஹெலிகாப்டர் கல்பாக்கம் மீது பறக்கவில்லை. ஒரு நாட்டுப் போர்க்கப்பல் வேறு நாட்டு துறைமுகத்துக்குள் நுழையும் முன் பாதுகாப்பைப் பார்வையிட அதில் இருக்கும் ஹெலிகாப்டர்பறப்பது வழக்கம் தான்.
அது போலத்தான் இந்த ஹெலிகாப்டரும் பறந்துள்ளது. அந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைந்தபின்னர் அந்த ஹெலிகாப்டர் பறக்கவில்லை. கடந்த திங்கள்கிழமை காலை கப்பல் சென்னை துறைமுகத்துக்கு 40கடல்மைல் தொலைவில் இருந்த போது அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. அப்போது மணி காலை 5.
உடனடியாக கப்பலுக்குத் திரும்புமாறு இந்திய விமானப் படை ஆணையிட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர்கப்பலுக்குத் திரும்பியது. அப்போது அந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து 10 கடல்மைல் தொலைவில் இருந்தது.
இதில் அனுமதி இல்லாமல் பறந்தது மட்டுமே தவறு. வேறு எந்த பெரிய தவறையும் அந்த ஹெலிகாப்டர்செய்யவில்லை என்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications