மதுரை அருகே 3 பெரிய ரயில் விபத்துக்கள் தவிர்ப்பு
மதுரை:
ரயில்வே ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட்டதால் மதுரை அருகே 3 ரயில்கள் பெரும் விபத்துகளில் இருந்துதப்பின.
இன்று அதிகாலை 5 மணிக்கு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் எதுவும் பழுது இருக்கிறதா என்ற வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மணியாச்சி அருகே உள்ள தண்டவாளத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்த போது, இரண்டு தண்டவாளங்களையும் இணைக்கும் பிஸ் பிளேட்டின் நட்டுகளும், போல்ட்டுகளும்காணாமல் போயிருந்தன.
இந்த தண்டவாளத்தில் ரயில் சென்றால் அவை கவிழ்த்துவிடும் என்பதால் உடனடியாக சற்று தூரத்தில்வந்துகொண்டிருந்த சென்னை-திருநெல்வேலி எக்ஸ்பிரசின் டிரைவருக்கு அவசர தகவல் கொடுத்தனர். உடனேஅந்த அந்த ரயில் நிறுத்தப்பட்டது. பிறகு அந்தத் தண்டவாளத்தின் பழுது சரி செய்யப்பட்டவுடன், 2 மணி நேரம்கழித்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதேபோல கொய்லான்-மதுரை எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணிக்கு கங்கைகொண்டான் மற்றும் நாரைக்கிணறுஆகிய ஊர்களுக்கிடையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் குறுக்கே 7அடி நீளமுள்ள தண்டவாளத் துண்டு கிடப்பதைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் ரயில் டிரைவருக்குத் தகவல்கொடுத்து அதை நிறுத்தினர். இதனால் பெரிய விபத்துத் தவிர்க்கப்பட்டது.
நேற்று இரவும் இதே தண்டவாளத்தில் ஒரு பெரிய இரும்புத் துண்டு கிடந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.இங்கு இரவு 11 மணிக்கு வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலை வழியிலேயே நிறுத்தி விபத்தைத் தடுத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications