கள், சாராயக் கடைகளைத் திறக்க அரசு திட்டம்
சென்னை:
பெருகி வரும் கள்ளச் சாராய, விஷச் சாராயச் சாவுகளைத் தடுக்கவும், வெளிநாட்டு மது விலை உயர்வுகாரணமாகவும் தமிழகத்தில் மீண்டும் சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக் கடைகளைத் திறக்க அரசு முடிவுசெய்துள்ளது.
மேலும் இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
கடந்த 1969ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன. அதைஎதிர்த்து அனைத்து எதிர்க் கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால் திமுக ஆட்சி இதைக் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் 1977ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக வருவதற்கு முன் கள், சாராயக் கடைகளைத் திறக்க மாட்டோம் என்றுஉறுதியளித்தார். ஆனாலும் கள்ளச் சாராய மற்றும் விஷச் சாராயச் சாவுகள் பெருகியதையடுத்து, எம்ஜிஆர் தன்கொள்கைகளை மறந்து கள், சாராயக் கடைகளைத் திறந்தார்.
இதற்கும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வந்த போதும், எம்ஜிஆர் ஆட்சி முடியும் வரை கள், சாராயக் கடைகள்இயங்கி வந்தன.
இதையடுத்து, 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ந்து1991ல் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி, பாக்கெட் சாராயத்தை ஒழித்தார்.
அப்போதிலிருந்து இன்று வரை கள், சாராயக் கடைகள் திறக்கப்படவே இல்லை. ஆனால் விஷச் சாராயச் சாவுகள்மட்டும் அடிக்கடி நடந்து கொண்டே இருந்தன.
அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடிக்கடி விஷச் சாராயச்சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. கிட்டத்தட்ட 100 பேர் வரை இச்சம்பவங்களில் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, கடந்த இரு நாட்களுக்கு முன் பலவிலையேற்றங்களையும் கட்டண உயர்வுகளையும் தமிழக அரசு அறிவித்தது.
மதுக் கடைகளில் விற்கப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் ஏழைக்குடிகாரர்கள் இவற்றை வாங்கிக் குடிக்காமல் மீண்டும் கள்ளச் சாராயத்தையும் விஷச் சாராயத்தையும்தான் மீண்டும்நாடிச் செல்வார்கள்.
இதுபோன்ற விஷச் சாராயச் சாவுகளைத் தடுக்கவும், அரசின் வருவாயைப் பெருக்கவும் மீண்டும் கள், சாராயக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
சிக்கன நடவடிக்கைக்காக சுவாமிநாதன் தலைமையிலான அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷனில் இது குறித்துஅரசு கலந்து ஆலோசித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் அக்கமிஷனும் இதற்குப் பரிந்துரை செய்யும் என்றேதெரிகிறது.
இதையடுத்து கள், சாராயக் கடைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்றைக்குள் வெளியிடப்படும் என்றுதெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications