டிசம்பர்-6
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர்-6ம், எதிர்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள பந்த்தும் அடுத்தடுத்ததினங்களில் வருவதால் தமிழகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விலைவாசி உயர்வு, கட்டண, வரி உயர்வுகளைக் கண்டித்து திமுக தலைமையிலான கட்சிகளும்,காங்கிரஸ்-தா.ம.கா.-கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாளை மறுதினம் (7ம் தேதி) முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளன.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நாளை வருகிறது. இந்த தினத்தையொட்டி தீவிரவாதிகள்தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நாடு முழுவதுமே கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ரயில் நிலையங்களிலும், ரயில்களும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்தண்டவாளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வரும்பாதுகாப்பும் கூட்டப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்டுகளிலும் பஸ்களிலும் பயணிகளிடம் திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. சமூக விரோதிகள்ஏற்கனவே முன்னெச்சரிகையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள்சோதனையிடப்பட்டு வருகின்றன. இதற்காக சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் அதிரடிப் படை:
பெரும் மதக் கலவரமும் தொடர் குண்டு வெடிப்புகளும் நடந்த கோயம்புத்தூரில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ரேப்பிட் ஆக்ஷன் போர்ஸ், தமிழக சிறப்புப் போலீஸ்படையைச் சேர்ந்த 3,000 பேரும் உள்ளூர் போலீசாரும் கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் மதக் கலவரங்கள் மூளும் என அஞ்சப்படும் இடங்களில் கூடுதல் பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.
நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு:
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கூடுதல் படைகள்நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நடந்த விமானத் தாக்குதலுக்குப் பின் வரும் முதல் பாபர் மசூதி இடிப்பு தினம் இது என்பதால்தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு விமான நிலையங்கள் இலக்காகலாம் என்று கருதப்படுகிறது. இதனால்,பாதுகாப்பும், சோதனையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு:
தமிழகத்தின் முக்கியக் கோவில்களான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருத்தணி முருகன் கோவில்,திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் கோவில் ஆகியவற்றிற்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னர் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.
முஸ்லீம்கள் போராட்டம்:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியைக் கட்டித் தர வேண்டும் எனக் கோரிமுஸலீம் ஐக்கிய ஜமாத் அமைப்பும், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் நாளை தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் ரம்ஜான் மாதத்தில் வருவதாலும் பாதுகாப்பில் தீவிரக் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.
நாளை மறுநாள் பந்த்:
இந் நிலையில் நாளை மறுதினம் எதிர்க் கட்சிகளின் பந்த்தும் வருகிறது. இதையடுத்து சமூக விரோதிகளை மாநிலம்முழுவதும் போலீசார் சுற்றி வளைத்து வருகின்றனர்.
இந்த பந்துக்கு கட்சிகள் தவிர அரசு ஊழியர்கள், பஸ் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்களின் சங்கங்கள்,ஆட்டோ ஓட்டுனர்கள், பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள், விவசாயிகள், வர்த்தக சங்கங்கள் ஆகியவையும்இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ள த.மா.கவும் பந்த்தை ஆதரிக்கிறது. இதனால், இந்த பந்த் நிச்சயம் வெற்றி பெரும்என்று தெரிகிறது.
இதனால், நாளையும், பந்த் தினத்தன்றும் தமிழகத்தில் மிகத் தீவிர பாதுகாப்பு இருக்கும்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications