மாணவனை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த நண்பர்களுக்கு வலைவீச்சு
கோயம்புத்தூர்:
கோவை அருகே வாக்மென் பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி, சிகரெட்நெருப்பால் சூடு போட்டு சித்ரவதை செய்த 5 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையை அடுத்து உள்ள அரசூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமியின் மகன் ரமேஷ்குமார் (17). அங்குள்ள ஒருபள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.
இவன் வைத்திருந்த வாக்மேன் பழுதாகிவிட்டதால் அவன் தன்னுடன் படிக்கும் மாணவன் சந்திரசேகரிடம் ரூ.50கொடுத்து பழுது பார்த்து கொடுக்குமாறு கூறியுள்ளான். ஆனால் குறித்த நாட்களுக்குள் அவன் பழுது பார்த்துதரவில்லை.
இதனால் ரமேஷ்குமார் தந்தையிடம் கூறியுள்ளான். இதை தொடர்ந்து சந்திரசேகரின் தந்தைக்கு விஷயம் சென்றபிறகே, வாக்மேனை சந்திரசேகர் திருப்பி கொடுத்துவிட்டான்.
இந்நிலையில் சந்திரசேகரின் தந்தை அவனை பள்ளிக்கு போகவேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கு ரமேஷ் தான்காரணம் என்று சந்திரசேகர் ஆத்திரம் அடைந்துள்ளான்.
நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலையில் பள்ளி முடிந்தவுடன் ரமேஷ் செல்லும் வழியில் வந்த சந்திரசேகர் தன்நண்பர்கள் யுவராஜ், கிருஷ்ணமூர்த்தி, யோகேஷ், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து அவனை சூலூர்தென்னம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு 5 பேரும் சேர்ந்து ரமேஷை நிர்வாணமாக்கி தொடை பகுதியில் சிகரெட் நெருப்பால் பல இடங்களில் சூடுவைத்து சித்ரவதை செய்து உள்ளனர். இதனால் வலி தாங்கமுடியாமல் ரமேஷ் அலறியதை கேட்டதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர்.
இதைப்பார்த்ததும் 5 மாணவர்களும் ஓடி விட்டனர். காயம் அடைந்த ரமேஷ் கோவை அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சூலூர் போலீசார் அந்த 5 மாணவர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து அந்த மாணவர்களை தேடிவருகின்றனர்.இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications