கொலை வழக்கில் 3 இலங்கைத் தமிழர்கள் கைது
சென்னை:
தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்சி டிரைவர் கொலை வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 3 தமிழர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் செளந்தரகுமார். இவர் தஞ்சை பஸ் நிலையம் அருகே உள்ள டிராவல் ஏஜென்சி ஒன்றில்டாக்சி டிரைவராக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி 2 இளைஞர்கள் அங்கு வந்துவேளாங்கண்ணி செல்வதற்கு டாக்சி வேண்டும் என்று கேட்டுள்ளனர். செளந்தரகுமார் தனது டாக்சியில் அவர்களைஅழைத்துச் சென்றார்.
வேளாங்கண்ணி போவதாக கூறி விட்டுச் சென்ற செளந்தரகுமார் 18ம் தேதி வரை தஞ்சை திரும்பவில்லை.இதையடுத்து செளந்தரகுமார் பணியாற்றி வந்த டிராவல் ஏஜன்சியின் உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் தனிப்படை அமைத்து செளந்தரகுமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அக்டோபர் 18ம் தேதி ஈசனூர் பாப்பனாறு கால்வாயில் ஒரு பிணம் மிதந்து வந்தது. அந்தப்பிணத்தை போலீஸார் கைப்பற்றி பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.
செளந்தரகுமார் காணாமல் போன செய்தி அறிந்த போலீசார் அந்தப் பிணத்தைக் கைப்பற்றி அதுசெளந்தரகுமார்தானா என்பது குறித்து அவரது தாயார் மூலம் அடையாளம் காணச் செய்தனர். அப்போது அதுதனதுமகன்தான் என்று செளந்தரகுமாரின் தாயார் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். அப்போது செளந்தரகுமாரை கொலை செய்தது நான்குஇலங்கைத் தமிழ் அகதிகள் என தெரிய வந்தது. தர்மபுரி மாவட்டம் பரம்பாறு அணைப் பகுதியில் உள்ள அகதிகள்முகாமில் இவர்கள் வசித்து வருகின்றனர். போலீஸ் படை அங்கு விரைந்து கொலையில் சம்பந்தப்பட்ட நாகராஜன்,நாகேந்திரன், சுதாகரன் ஆகியோரை கைது செய்தனர். குணரத்தினம் என்பவர் தலைமறைவாக உள்ளார்.
இந்தக் கும்பல் செளந்தரகுமாரைக் கொன்று கால்வாயில் பிணத்தை வீசியுள்ளனர். பின்னர் காரை திருடிக் கொண்டுவந்து அதை நம்பர் பிளேட், கலரை மாற்றி விற்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான்போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்கள்.
நான்கு அகதிகளும் இலங்கையிலுள்ள வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கு 1990ம் ஆண்டு நடந்தகலவரத்தில் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி தமிழகம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வந்த இடத்தில்அமைதியாக இருக்காமல் அடிக்கடி டூ வீலர்களை திருடிக் கொண்டு போய் விடுவார்களாம். இதுதொடர்பாகஉள்ளூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது ஏற்கனவே புகார்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications