15 ரூபாய்க்கு 100 மில்லி: மலிவு விலை மது அமோக விற்பனை
சென்னை:
கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழக அரசு அறிமுகம் செய்த மலிவு விலை மது புத்தாண்டு தினம் (நேற்று)முதல் விற்பனைக்கு வந்தது.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.பண்ருட்டியில் மட்டும் 52 பேர் இறந்தனர்.
இதையடுத்து கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மலிவு விலை மதுவை விற்பனை செய்ய தமிழகஅரசு முடிவெடுத்தது.
ரூ.15க்கு 100 மில்லி லிட்டர் மதுவை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. நேற்று முதல் இந்தமலிவு விலை மது விற்பனை அமலுக்கு வந்தது.
சென்னையில் உள்ள மதுக் கடைகளில் நேற்று மாலை முதல் மலிவு விலை மது விற்பனை தூள் பறந்தது.
"குடிமகன்"களின் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் 4 முதல் 5 பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே மலிவு விலை மது பாட்டில்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
மது தயாரிப்பாளர்கள் அதிருப்தி?
முன்னதாக, அரசு அறிவித்துள்ள ரூ.15க்கு 100 மில்லி மதுவைத் தயாரிப்பதில் லாபமில்லை என்று மதுதயாரிப்பவர்கள் கூறியுள்ளதால், மலிவு விலை மது வருவது தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகின.
ஏற்கெனவே மார்க்கெட்டில் ரூ.27க்கு 100 மில்லி மது விற்பனை செய்து வரும் வியாபாரிகள் எப்படி ரூ.15க்குவிற்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்?
ஒரு லிட்டர் மலிவு மதுவைத் தயாரிக்க ரூ.180லிருந்து ரூ.200 வரை ஆகிறது. ரூ.15க்கு 100 மில்லி சாராயம்விற்றால் ஒரு லிட்டருக்கு ரூ.80 வரை நஷ்டமாகும். இதெல்லாம் சரிப்படாது என்று தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர்.
ஆனாலும் ஒருவழியாக மலிவு விலை மது விற்பனைக்கு வந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications