அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. சிவகாமியை நீக்க ராமதாஸ் முடிவு
திண்டிவனம்:
கட்சியில் ஏற்பட உள்ள பிளவைத் தடுக்க, அதிமுக ஆதரவு எம்.எல்.ஏவான சிவகாமியை கட்சியிலிருந்து நீக்கபாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
பாமக எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவ செய்த முயற்சியை தொடர்ந்து , பாமகவில் பிளவு ஏற்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகாமி, இனி நான் பாமகவில் இல்லை, தனித்து செயல்பட போவதாகஅறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம்நடந்தது.
ராமதாஸ் பேசுகையில், சிவகாமியை கட்சியிலிருந்து நீக்குவது தான் கட்சிக்கு நல்லது. இவர் ஒருவரால் கட்சியில்ஜாதி ரீதியான பிரிவுகள் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதை மற்ற தலைவர்களும் ஆமோதித்துள்ளனர். மேலும், எம்.எல்.ஏக்களுக்கு கிடிக்கிப்பிடி போடும் வகையில்,அவர்களின் தேர்தல் வரவு-செலவு கணக்குகளை ராமதாஸ் கேட்டு வாங்கியுள்ளார்.
எம்.எல்.ஏக்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த, எம்.எல்.ஏவான காடுவெட்டி குரு தலைமையில் பாமகஇளைஞர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காடுவெட்டி குரு கூட்டத்தில் பேசுகையில், கட்சிக்கு துரோகம் செய்யும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் உட்பட யாராகஇருந்தாலும் அவர்களை பாமக இளைஞர்கள் கொலை செய்துவிட்டு சிறை செல்ல வேண்டும் என்றுஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
அவரது இந்தப் பேச்சை ராமதாஸ் அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பேசிய பெரும்பானதலைவர்கள், ஜெயலலிதாவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாமகவில் இருந்து சிவகாமி விரைவில் நீக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications