கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோவையில் இன்று ரயில் பயணிகள் திடீர் போராட்டத்தில் குதித்ததால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது. பல ரயில்களும் நிறுத்தப்பட்டன.

பாலக்காடு-திருச்சி ரயிலில் கூடுதல் பெட்டிகளைச் சேர்க்க வேண்டும் எனக் கோரி சுமார் 400 பயணிகள் கோவைவடக்கு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான சீசன் டிக்கெட் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கோவையில் இருந்துஈரோடு, திருப்பூர் மற்றும் அருகாமை நகரங்களில் பணிபுரிய இவர்கள் சென்று வருகின்றனர்.

ஆனால், சில நாட்களாக இந்த ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை திடீரென குறைக்கப்பட்டதாகத் தெரிகிறது.இதனால், நிற்கக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் வழிகிறது. இதையடுத்து கூடுதல் பெட்டிகளைச் சேர்க்கவேண்டும் என பயணிகள் கோரி வந்தனர். ஆனால், ரயில்வேயிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

வெறுத்துப் போன பயணிகள் இன்று காலை 8.30 மணிக்கு இந்த ரயிலை கிளம்பவிடாமல் அபாய சங்கிலியைஇழுத்தும், தண்டவாளத்தில் படுத்தும் தடுத்து நிறுத்தினர்.

உடனடியாக போலீசாரும், ரயில்வே அதிகாரிகளும் விரைந்து வந்து சமாதானப்படுத்த முயன்றனர். எவ்வளவோகோரியும் கூட போராடத்தைக் கைவிட பயணிகள் மறுத்துவிட்டனர். இதனால், 2 மணி நேரம் பல ரயில்கள்நிறுத்தப்பட்டன.

பாலக்காட்டில் உள்ள மண்டல ரயில்வே அதிகாரி வந்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என மக்கள்கோரினர். அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்வதாக உயர் அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததையடுத்துபோராட்டத்தை 10.30 மணிக்கு மக்கள் திரும்பப் பெற்றனர்.

இதனால் ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.

ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகள்:

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தென்னக ரயில்வேயிடம் ரயில் பெட்டிகளுக்கு பற்றாக்குறைஏற்பட்டுள்ளது. எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் 250 பெட்டிகளை ராணுவத்துக்காக ஒதுக்கித்தந்துவிட்டோம். இதனால் எங்களிடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பாலக்காடு இருந்து மட்டும் 17 ரயில் பெட்டிகள் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. அதில் வீரர்களும்ஆயுதங்களும் காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன என்றனர்.

இந்தத் தகவலை மக்களிடம் விளக்கியிருந்தால் போராட்டமே நடந்திருக்காது. மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.ஆனால், பாதுகாப்பு காரணங்களால் இதை வெளியில் சொல்லவில்லை என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+