சார்க் மாநாடு தொடங்கியது: பாக். கோரிக்கை நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு:

தெற்காசிய நாடுகளின் 3 நாள் சார்க் மாநாடு இன்று காலை இந்திய நேரப்படி 10.40 மணிக்குத் தொடங்கியது.

நேற்று தொடங்குவதாக இருந்த இந்த மாநாடு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபின் வருகையில் ஏற்பட்டதாமதம் காரணமாக ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று தொடங்கிய இந்த மாநாட்டில் 7 நாடுகளில் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தியப் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா, மாலத்தீவு அதிபர் முகம்மத் கயூம், பங்களாதேஷ் அதிபர் பேகம் கலிதா ஜியா, பூடான் மன்னர்வாங்சுக், நேபாள பிரதமர் நர் பகதூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாடு தொடங்கியவுடன் சார்க் நாடுகளுக்கான கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் நேபாள வழக்கப்படிபிரார்த்தனை நடந்தது.

இதன் பின்னர் ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் உரையாற்றுவார்கள்.

இம் மாநாட்டில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் விவாதிக்க வேண்டும் எனபாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், இதை ஏற்க பிற நாடுகள் மறுத்துவிட்டன.

சார்க் அமைப்பின் இரு நாட்டுப் பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதில்லை என்று கூறி பாகிஸ்தானின் கோரிக்கைநிராகரிக்கப்பட்டது.

இதனால், தனக்கு பேச வழங்கப்பட்ட நேரத்தில் மீண்டும் எல்லை விவகாரத்தை பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப் கிளப்ப வாய்ப்புள்ளது. அப்படி ஏதும் நடந்தால், இதற்கு வாஜ்பாயும் பதிலளித்துப் பேசுவார்என்று தெரிகிறது.

மாநாட்டின் மேடையில் அமர்ந்திருந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய், பர்வேஸ் முஷாரபின் முகத்தைக் கூடபார்க்கவில்லை. நேராக மக்கள் அமர்ந்திருந்த பகுதியை மட்டுமே பார்த்துக் கொண்டுள்ளார்.

இதனால், ஒரு வித பதற்றத்துடன் தான் இந்த மாநாடு தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+