இந்தியா-பாக் விவகாரம்: சிறப்புத் தூதரை நியமிக்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க சிறப்புத் தூதரை நியமிக்க அமெரிக்காதிட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் நுழைந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் முழுமையாகஒழிக்காவிட்டால் அந் நாட்டின் மீது நிச்சயம் தாக்குதல் நடத்துவோம் என இந்தியா தெளிவாகக் கூறிவிட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ். ரஷ்யா ஆகிய நாடுகளிடம் தனது நிலையை இந்தியாவிளக்கிவிட்டது. நாடு முழுவதும் இருந்தும் சிறப்பு ரயில்களில் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுவருகின்றனர்.
ஏராளமான பீரங்கிகள், ஆயுதங்களும் ரயில்கள், விமானங்கள் மூலம் எல்லைப் புறத்தில் குவிக்கப்பட்டுவருகின்றன.
காஷ்மீரில் மட்டுமின்றி பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லையிலும் இந்தியா தனது படைகளைத் தயார் நிலைக்குக்கொண்டு வந்துவிட்டது. பாகிஸ்தானும் படைகளைக் குவித்து வந்தாலும் போருக்கு அந் நாடு பொருளாதாரரீதியிலோ, அரசியல் ரீதியிலோ தயார் நிலையில் இல்லை.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான நார்த்தர்ன் அலையன்ஸ் ராணுவம் ஆட்சியைப் பிடித்துள்ளது.இதனால், ஆப்கானிஸ்தான் எல்லையிலும் தனது படைகளை பாகிஸ்தான் எப்போதும் உஷார் நிலையில் வைக்கவேண்டியுள்ளது.
இந் நிலையில் இந்தியா தாக்குதல் நடத்தினால் அது பாகிஸ்தானில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இதனால், அவசர அவசரமாக தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால், 20 தீவிரவாதிளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாகிஸ்தானில் உள்ள எந்த அமைப்பும் இந்தியஎதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் கண்காணிக்க வேண்டும், இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள்தாக்கினால் இதற்கு பாகிஸ்தான் அரசு தான் பொறுப்பேற்ற வேண்டும் என இந்தியா கூறிவிட்டது. இதற்குபாகிஸ்தான் தயாராக இல்லை.
இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை முதலில் தாக்கஇந்தியா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் முழு நடவடிக்கை எடுக்காவிட்டால், தாக்குதல் உறுதி என்பதால் அதைத் தடுக்க அமெரிக்கா முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க தனி தூதரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எந்த உதவியும் செய்யத் தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதே போல அமெரிக்காவின் யோசனையின்பேரில் தான் இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேரும் இந்தியா,பாகிஸ்தானில் ஒரு வார காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட அமைதித் தூதர் என்ற முறையில் வந்துள்ள அவர் இந்தியாவில் மட்டும் 5 தினங்கள் தங்குகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications