அப்துல் லத்தீப் விஷம் வைத்து கொலையா? - சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
சென்னை:
அப்துல் லத்தீப்பை விஷம் வைத்துக் கொலை செய்துள்ளனர் என்றும் அதனால் அவரது மரணம் பற்றி சி.பி.ஐ.விசாரிக்க வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய தேசியலீக் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நேற்று (சனிக்கிழமை) அக்கட்சியின் அகிலஇந்திய தலைவர் சுலைமான் சேட் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக பிரிவு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இது பற்றி சுலைமான் சேட் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வாணியம்பாடி தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. நியாயப்படி பார்த்தால் இந்த தொகுதியை அதிமுகஎங்களுக்கு தான் விட்டுத் தர வேண்டும். கேட்க வேண்டியது எங்கள் கடமை, தருவார்கள் என்று நம்புகிறோம்.
வாணியம்பாடியில் ஜெயலலிதா போட்டியிட்டால் எங்களுக்கு வேறு தொகுதி ஒதுக்க வேண்டும். அப்படிஒதுக்கவில்லை என்றால், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுவது தவிர வேறு வழியில்லை என்று அவர்கூறினார்.
பிறகு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:
அப்துல் லத்தீப் சாவில் மர்மம் உள்ளது. லத்தீப் நல்ல உடல் நலத்துடன் தான் இருந்தார். இறப்பதற்கு முன் அவர்வி.பி.சிங் கூட்டத்தில் தெம்பாகத்தான் பேசினார்.
அடுத்த இரண்டு நாட்களில் இறந்து விட்டனர். அவார விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். காலை 6 மணிக்குஅவர் இறந்துள்ளார். 7.30 மணி வரை யாரிடமும் சொல்லவில்லை.
அவரது உடல் மருத்துவமனையில் இருந்த போது நான்கு பேர் அவரது வீட்டுக்கு வந்து, வீட்டில் இருந்த இரண்டுகோடி ரூபாயை எடுத்துச் சென்றுள்ளனர். பாங்க் பாஸ் புத்தகங்களையும் காணவில்லை.
இதனால் அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications