புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேசன், மாறன் இருவரையும் விடுதலைசெய்யவில்லையென்றால், புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மனித வெடிகுண்டு மூலம் தகர்க்க போவதாகமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக உள்ளவர் மனோகரன். இவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை)திருப்பூரில் போஸ்ட் செய்யப்பட்டு விடுதலைப்படைப் படை, அரியலூர் என்ற முகவரியுடன் ஒரு கடிதம் வந்தது.
இதில் புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனை குண்டு வைத்து தகர்க்க போவதாக எழுதியிருந்தது. இதனால் நேற்றுரயில் நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது. அந்த கடிதத்தில் இருந்த விவரம் வருமாறு:
சிறையில் இருக்கும் தமிழர் விடுதலைப் படையை சேர்ந்த ரேடியோ வெங்கடேசன், மாறன் மற்றும் அனைத்துவிடுதலைப் படையினரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
வீரப்பனை பிடிப்பதற்காக காட்டிற்குள் சென்றுள்ள அதிரடிப் படையினரை உடனே திரும்ப அழைக்க வேண்டும்.இல்லையென்றால் புதுக்கோட்டை-காரைக்குடிக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஆள் இல்லாத இடத்தில்சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்படும்.
மனித வெடிகுண்டுக்காரர்கள் ரயில் பெட்டியில் சமயம் பார்த்து ஏறுவார்கள். போலீஸ் விழிப்புடன் இருந்தாலும்விடுதலைப் படையினர் வெற்றிகரமாக ரயில் பெட்டி மற்றும் தண்டவாளத்தில் குண்டு வைப்பார்கள்.
புதுக்கோட்டை மற்றம் காரைக்குடி ஸ்டேஷன் மாஸ்டர்களின் தலை இன்னும் 75 நாட்களில் துண்டிக்கப்படும். ரயில்நிலையத்தின் பின்புறம் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும், இப்படிக்கு விடுதலைப்படை, அரியலூர் எனஎழுதப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து காரைக்குடிவரை உள்ள ரயில் தண்டவாளம் டிராலி மூலம் கண்காணிக்கப்படுகிறது. புதுக்கோட்டை வழியாக செல்லும்அனைத்து ரயில்களும் பலத்த சோதனை செய்யப்பட்ட பின்பே அனுப்பப்படுகிறது.
இதேபோல் ஒரு கடிதம் கடந்த நவம்பர் 26ம் தேதி புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications