போதை வழக்கிலும் சிக்கினார் செக்ஸ் டாக்டர்
சென்னை:
ஆபாசப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்ட "செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் மீது போதைப் பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணேசன் என்பவன் அளித்த புகாரின் பேரில் பல பெண்கள், சினிமா நடிகைகள், டிவி நடிகைகளை ஆபாசப் படம்எடுத்த பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரகாஷின் டிரைவர் சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தில் பிரகாஷ் போதை மருந்துகள் பயன்படுத்துவார் என்றதகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரின் அண்ணாநகர் மருத்துவமனையில் அதிரடி சோதனைநடத்தினர்.
மருத்துவமனையில் 55 கிராம் ஹெராயின் மற்றும் தடை செய்யப்பட்ட சில போதை மாத்திரைகளும் கிடைத்தன.பிரகாஷ் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் எளிதில் ஜாமீன் கிடைக்காது.
ஆபாசப்படத்தில் நடித்த டிவி நடிகை
போலீசாரின் விசாரணையின் போது பிரகாஷும் ஒரு டிவி நடிகையும் உல்லாசமாக இருந்த சில படங்கள்போலீசாரிடம் கிடைத்தன. இது பற்றி பிரகாஷிடம் கேட்டபோது, அந்த நடிகை நாம் உல்லாசமாக இருப்பதை படம்பிடித்து பார்த்து விட்டு பின்னர் அழித்து விடுவோம் என்று கூறினார்.
எனவே நாங்கள் இருவரும் உல்லாசமாக இருபபதை படம் எடுத்தேன். ஆனால் அதை அழிக்காமல்விட்டுவிட்டேன் என்று கூறினார். இந்த நடிகையிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) போலீசார் விசாரணை செய்தனர்.
பிரகாஷிடம் உல்லாசமாக இருந்ததையும், அதை படம் பிடித்து பார்த்து ரசித்ததையும் டிவி நடிகை ஒத்துக்கொண்டார். தன்னைப் பற்றி வெளியில் சொல்லி விடாதீர்கள் என்றும் அவர் போலீசாரிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
