நார்வே அமைதிக் குழுவினர் இலங்கை வருகை
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த உதவும் நார்வே அமைதிக்குழுவினர் இன்று (புதன்கிழமை) இரவு கொழும்பு வந்து சேர்கின்றனர்.
சமீபத்தில் இலங்கை பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே, தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படிவிரைவாகச் செயல்பட்டார்.
பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை அவர் விரைவில் துவக்குவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள் கடந்த டிசம்பர்24ம் தேதி நள்ளிரவிலிருந்து போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து இலங்கை ராணுவமும் போர்நிறுத்தத்தை அமல் படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து விக்கிரமசிங்கே படு சுறுசுறுப்புடன் பேச்சுவார்த்தைக்கான வழிகளை மேற்கொண்டார். நார்வேபிரதமர் ஜெல் மாக்னே போன்ட்விக்கை தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டுபேச்சுவார்த்தை நடத்துமாறு அழைப்பு விடுத்தார்.
அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்ட நார்வே அமைதிக் குழுவினர் இன்று இரவு கொழும்பு வந்தடைகின்றனர்.
நார்வே வெளியுறவுத் துறை துணை அமைச்சர் விடார் ஹெல்கெசன் தலைமையில் வரும் நார்வே குழுவினர்,முதற்கட்டமாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, விக்கிரமசிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் டிரோன்பெர்னாண்டோ உள்பட பல அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் தற்போது மிகவும் இதமான சூழ்நிலை நிலவி வருவதால், பேச்சுவார்த்தைவெற்றி பெறும் என்று அனைவரும் நம்புகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு இலங்கையில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துப்பொருட்களையும் கொண்டு செல்வதற்கு இருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டன.
ஆனால் வரும் 15ம் தேதி முதல் தடை முழுவதுமாக விலக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதுசூழ்நிலையை மேலும் இதமாக்கியுள்ளது.
நார்வே அமைதிக் குழுவினர் பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனும் நார்வே பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தியாவில் பேச்சு நடத்த புலிகள் விருப்பம்:
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் வைத்து நடத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள்விரும்புகின்றனர்.
விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆன்டன் பாலசிங்கம் இதுகுறித்து இந்திய அரசிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் சார்பில் இவர்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளார். இவருடைய உடல்நலக்குறைவு காரணமாக பாலசிங்கம் தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டும் என்பதால் அவர் இந்தியாவைத்தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக தலைநகர் சென்னை, கேரள தலைநகர் திருவனந்தபுரம் அல்லது கர்நாடக தலைநகர் பெங்களூர் ஆகிய இந்த3 நகரங்களில் ஏதாவது ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்பாலசிங்கம்.
ஆனால் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவே கூடாது என்று அக்கட்சிகள்கூக்குரலிட்டு வருகின்றன.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications