இந்தியாவில் புலிகளை அனுமதிப்பதில் தவறில்லை: மதிமுக

Subscribe to Oneindia Tamil

திருச்சிராப்பள்ளி:

இந்தியாலில் வைத்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிப்பதில் தவறில்லை என்று மதிமுகதலைவரும், மத்திய இணையமச்சருமான கண்ணப்பன் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான நார்வே நாட்டு தூதுக்குழு நடத்தும் பேச்சவார்த்தையை, இந்தியாவில் நடத்த மத்தியஅரசு உதவ வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பேச்சுவார்த்தை முடியும் வரை சென்னையிலேயே தன்னைத் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும்விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கண்ணப்பன், தமிழக எதிர்க் கட்சிகள் பாலசிங்கத்துக்குஅடைக்கலம் கொடுப்பதை எதிர்ப்பது குறித்து கவலை தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழும் தமிழர்கள் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்றுவிரும்புகிறார்கள். ஆனாலும் இந்த விஷயத்தில் வாஜ்பாய்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கண்ணப்பன்கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+